பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் என வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட இந் நோயாளியை இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.