இணைந்து பணியாற்ற முன்வருமாறு வடக்கு – கிழக்கு எம்பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

editor 2
Ranil Wickremesinghe, Sri Lanka's president, speaks during the Nikkei Forum Future of Asia in Tokyo, Japan, on Thursday, May 25, 2023. The forum organized by Nikkei Inc. will continue through May 26. Photographer: Kiyoshi Ota/Bloomberg via Getty Images

வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் பொருளாதார தீர்வையும் – அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகிறார். இந்த நிலையில், தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஒருபுறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதேவேளை, மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வை நாம் காண வேண்டும். இந்த இரண்டு பிரதான விடயங்களும் நிறைவேற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மிகவும் அவசியமானது.

எனவே, இந்த இரண்டு பணிகளையும் முன்னெடுக்கின்ற அரசுடன் சேர்ந்து பணியாற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குடையின் கீழ் பயணித்தால்தான் பொருளாதார தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article