எதிர்க்கட்சி கூட்டணியில்யில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல் படுவதற்கான தமது உறுதிப்பாட்டை
வெளிப்படுத்தும் அதே வேளை, நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில்
இணையவில்லை என அவர் கூறினார்.
அண்மையில் பொது ஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்
களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி எதிர்வரும் ஜனாதிதிபதித் தேர்தலை கருத்தில்
கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தனர்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, ஐக்கியமக்கள் சக்தியில் நேற்று முன்தினம்
உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.