புகையிரத பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு காங்கேசன்துறை – முதல் கொழும்பு வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாலேயே யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதியில் அநுராதபுரம் முதல்
யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ்நிலா ரயில் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோண மலை நோக்கி சென்று,
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்படும் – என்றார்.