பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைவாக காணப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடும் பொழுது, தற்போது எரிபொருள் விற்பனை 40 – 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் விற்பனை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நத்தார் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கப்பெறாத பட்சத்தில், உள்நாட்டு முட்டைகளை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்து தயாரிக்கப்படும் கேக்கின் விலையை குறைப்பது என்பது சாத்தியமற்றது எனவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.