நத்தார் – புத்தாண்டை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில், அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுமென சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் கைதிகளின் சார்பில் உறவினர்கள், நண்பர்கள் என தலா மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வருகைதரும் உறவினர்கள் ஒருவருக்கு ஏற்ற அளவில் மாத்திரம் உணவு பொதிகள் மற்றும் இனிப்புகளை கொண்டு வர வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அறிவுறுத்தியுள்ளார்.