தொடர் மழையால் வடக்கில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு பாதிப்பு!

editor 2

தொடரும் கன மழையால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 371 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தில் 892 குடும்பங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article