வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள கொத்தர் குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்களால் குறித்த குளம் உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு குளம் உடைப்பெடுத்தால்,
முல்லைத்தீவின் தண்டுவான் பிரதேசத்தில் உள்ள அலைகல்லுப்போட்டகுளம், பழம்பாசியில் உள்ள தவசிக்குளம் என்பவற்றுக்கு கூடுதல் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அந்தப் பிரதேசங்களில் தாழ் நிலங்களில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.