கந்தக்காடு புனர்வாழ்வு நலன்புரி முகாமிலிருந்து கைதிகள் ஐம்பதற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 15 பேர் வரையில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனை உட்பட்ட குற்றச்செயல்களுக்கு உள்ளானவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதற்காக கந்தக்காடு நன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.