பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.