அரச ஊழியர்கள் 8 ஆயிரம் பேரை நிரந்தர ஊழியர்களாக்க நடவடிக்கை!

editor 2

அரச ஊழியர்கள் 8 ஆயிரத்து 400 பேரை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலேயே அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அதற்கமைய, இந்த அமைச்சில் ஊழியர்கள் 4 இலட்சத்து 95,000  பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share This Article