வெளிநாடுகளுக்கு சிறார்களைக் கடத்துவது தொடர்பில் விசாரணை!

editor 2

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட தமிழ் சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்படுவது ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article