அம்பாறை பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மருத்துவர்,
அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு திட்டமிட்டபடி வராததால் மருத்துவமனையிலிருந்து அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தாதியர்கள் இருவர், குறித்த மருத்துவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர்.
அதன்போது குறித்த மருத்துவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் நோயாளர் காவு வண்டியை வரவழைத்து அதன் மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவரைப் பரிசீலித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.