கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரார்த்தனை நிலையத்தின் போதகர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வவுனியா, சிறீமாபுரத்தில் பிரார்த்தனை நிலையம் நடத்தி வரும் 54 வயதுடைய போதகர் ஒருவர்,
கனடாவில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 12 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், இந்த போதகர் மேலும் பலரை ஏமாற்றி இதேபோல் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.