மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் மாவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் இடித்து அழிதுள்ளனர்.
தரவை துயிலும் இல்லத்தில் அனு மதி பெறப படாமல் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்படுகிறது என்றும் அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி பொலிஸார் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் அந்த நினைவுத் தூபியை அகற்ற உத்தரவிட்டது. அந்த உத்தரவுடன் துயிலும் இல்ல வளாகத்துக்கு நேற்று சென்ற பொலிஸார் நினைவுத் தூபியை இடித்து அழித்தனர்.
இந்த நினைவுத் தூபி மாவீரர் குடும்பங்களால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது