இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் சதியொன்று இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றிய இலங்கை கிரிக்கட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சதி தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.