திங்கட்கிழமை மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

editor 2

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையினை எதிர்வரும் சனிக்கிழமை (18) மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article