லலித் கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார்!

editor 2

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லலித்கொத்தலாவலையை  பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என  அவரது உறவினரான சிறீனி விஜயரட்ண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் லலித்கொத்தலாவலையில் மரணவிசாரணை இடம்பெற்றபோதே குடும்பத்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

லலித்கொத்தலாவலையை சுற்றியிருந்தவர்கள் அவரின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு எழுதிவாங்கிக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல இருட்டறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார் அவரது படுக்கை அறையிலிருந்து தனது அலுவலக அதிகாரிகள் கூட்டத்திற்கு செல்வதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரைவீட்டிலிருந்து வெளியேறச்செய்து அலுவலகத்திலேயே இருண்ட அறையொன்றிற்குள் அவர்கள் தங்கவைத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share This Article