நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன!

editor 2

நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 50 கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”அண்மைக்காலமாக பல மருத்துவர்கள் உயர் வரி விதிப்பால் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனால் நாட்டில் பல வைத்திய சாலைகள் மூடப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

குறிப்பாக கிராமபுறங்களில் காணப்படும் பல வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் இந்த வைத்திய சாலைகள் இயங்குவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, மாகாணங்களை மையப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுவந்த பணிப் புறக்கணிப்பு நேற்றைய தினம் அரசாங்கத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This Article