2023 ஆம் ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.