விஸா இல்லாமல் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் திரட்ட நடவடிக்கை!

editor 2

அங்கீகரிக்கப்பட்ட விஸா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விஸா வழங்குவதற்கு அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்றும் இஸ்ரேலில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்
ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விஸா இல்லாமல் தாதியர் சேவையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு விஸா வழங்குமாறும் அதேபோன்று விஸாக் காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விஸாவை புதுப்பிக்குமாறும் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தனது கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விஸா இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாயப் பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளதாக இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Article