அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் – சுமணரத்ன தேரர் மிரட்டல்!

editor 2

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகா ரிகள் மேற்கொள்ளும் கீழ்த்தரமான நடவ டிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகள் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் கடும் தொனியில் கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங் களை கொண்டு பேசினார்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடு களை செய்தனர்.

குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக குறித்த கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில் அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக மாநகர சபை ஆணையாளர் சுமனரத்ன தேரரிடம் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் நேற்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடு களில் ‘பொலிஸார் இந்த வீதியை மூடினார்கள், பிரச்னை ஏற்படுத்தினார்கள்.

இறுதியில் எமக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவர்களின் இந்த செயற்பாடு சரியானதா. இவ்வாறு செய்ய வேண்டாம். நாம் உதவியற்றவர்கள். இனம் என்ற ரீதியில், இங்கு இடம்பெறும் குற்றங்களைத் தடுக்க வேண்டும். நாட்டில் இனவாதம் இல்லை, மத வாதமும் இல்லை.

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் மிகவும் அமைதியாக வாழ்கின்றனர்.

சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் கீழ்த்தர மான நடவடிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும்.

அவ்வாறு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது’ என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது இந்தச் செயற்பாட்டினால் நேற்று மாலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு – பதற்றம் ஏற்பட்டமை குறிப் பிடத்தக்கது.

Share This Article