மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!

editor 2

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை  அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது.

சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45 வயது நபருக்கே  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி தர்ஷிகா ஜெகநாதன் இலங்கையை சேர்ந்த பெண், இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தர்ஷிகா கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகரனுடன் வாழ கனடா சென்றிருந்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர், சசிகரன் தனது மனைவியான 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதனை ஸ்காப்ரோவில் வைத்து கொலை செய்துள்ளார்.  

இதேவேளை, தர்ஷிகா கொலை செய்யப்பட்ட காலத்தில்  சசிகரனைப் பிரிவதற்காக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சசிகரன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என கனேடிய பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Share This Article