இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை காலையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருகின்ற வகையில் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உயிர்நீத்த உறவுகளின் திருவருவ படத்திற்கு பொதுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
இவ் நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.