கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜூன் மாதம் 16 அன்றுஅதன் முதல் வருகையிலிருந்து, அடுத்தடுத்த 9 பயணங்களின்போது, சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் பெற்றுள்ளனர்.
அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சார பிணைப்புகளையும் அனுபவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் கோவில்களின் அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணி பெற்றுள்ளார்கள்.
வட மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவியுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகமும் வலி.வடக்கு பிரதேச சபையும் ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் வடமாகாண ஆளுநர் முயற்சிகளை ஒருங்கிணைத்தார்.
இந்த மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்திற்கு உதவியுள்ளதுடன் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.