தமிழர்களுக்குக் கிட்டிய அரசியல் உரிமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைநழுவ விட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சாட்டினார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:-
“முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். ஆனால், அந்த உரிமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாத்துக்கொள்ளவில்லை.” – என்றார்.