கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 8.30 மணி முதல் நாளை முற்பகல் 8.30 மணி வரையில் குறித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தைப் பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.