இந்தியாவின் புதுடில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் பணியாற்றும் இலங்கைக்கான கம்போடிய தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவையை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் மானி முன்மொழிந்தார். இதன் மூலம் வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் அவர் விளக்கினார்.
கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இலங்கையை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் ஹரிணி தெரிவித்தார்.