சென்னை – யாழ். விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்!

சென்னை - யாழ். விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்!

editor 2

இந்தியாவின் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ தீர்மானித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊடாக சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு விமானத்தை
இயக்குகிறது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக ஒரு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article