ஜனாதிபதி அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.