முல்லை – பரந்தன் வீதியில் பாலத்துக்கு அடியிலிருந்து சடலங்கள் இரண்டு மீட்பு!

editor 2

கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தன் – புதுக்குடியிருப்பு ஏ – 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியிலேயே இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏ – 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுவரும் பாலத்திலேயே குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article