மொட்டு மீண்டும் மலரும் என்கிறார் மகிந்த!

மொட்டு மீண்டும் மலரும் என்கிறார் மகிந்த!

editor 2

மொட்டுக்கட்சி படுதோல்வியடைந்து விட்டதாகவும் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று எவரும் கனவு காணக்கூடாது எனவும் மொட்டு மீண்டும் மலரும் என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

மொட்டுக் கட்சியை எவராலும் சிதைக்க முடியாது. அது மீண்டெழும். எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி பலத்தைக் காட்டும். பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடம்
புகட்டுவார்கள்.

மொட்டுக் கட்சி தற்போது ஆட்சியில் இல்லாததன் அருமையை மக்கள் உணரத்
தொடங்கிவிட்டார்கள்.

எமது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் நிம்மதி யாக வாழும் சூழலை ஏற்படுத்துவோம்-என்றார்.

Share This Article