மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடியுள்ளார்.
தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பேருந்தினூடாக சந்தேக நபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
சம்மாந்துறையில் உடங்கா பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளார்.