புது வீடு கட்டும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை..!

cyberiolk

பொதுவாக வீடு கட்டும் போது வாஸ்த்து பார்த்து தான் கட்டுவார்கள். கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து பார்க்க வேண்டும்.

வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் அனைத்து கலைகளுமே தோன்றியுள்ளன.

ஆகவே இதன் அடிப்படையில் தான் வாஸ்தும் பார்ப்பார்கள். அதேபோல் வீடு கட்டும் பொழுது பல விடயங்களை கருத்தில்கொள்ள வேண்டும். அவை பற்றிய சில குறிப்புகளை பார்ப்போம்.

  • வீட்டின் பூஜையறையானது வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். சுவாமி படங்களை கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
  • கிழக்கு திசையில் சமையல் அறை மற்றும் கழிப்பறைகள் அமைக்க கூடாது.
  • துளசி மடத்தினை வீட்டின் முன் பக்கத்தில் வைப்பது நல்லது. மேலும் கிழக்கு திசை பார்க்கும் படி இருந்தால் மிகவும் நல்லது.
புது வீடு கட்டும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை..! | Astrology Vastu Shastra Palan Tips Tamil
  • விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. படுக்கை அறைகள் வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது சிறந்தது.
  • தலையை கிழக்கு நோக்கி வைத்து தூங்கினால் மாணவர்களுக்கு நேர்மறை ஆற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்லது.
  • வீட்டிற்காக கிணறு தோண்டும் போது வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டுவது மிக அவசியம்.
  • வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும்.
Share This Article