சீரற்ற காலநிலை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

Editor 1

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சீரற்ற காலநிலையையடுத்து, ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பேர் காயமடைந்துள்ளனர். 

அத்துடன், 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479, 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களில் 8,470 குடும்பங்களைச் சேர்ந்த 27, 517 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும் 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 103 வீடுகள் முழுமையாகவும், 2,635 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

Share This Article