ஜனவரி உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

ஜனவரி உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

Editor 1

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்தியுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டிசம்பரில் உயர் தரப்பரீட்சை நடைபெற ஏற்பாடாகியுள்ளதால் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே,

ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே,

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பெயரிடப்பட்டிருந்தவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த நிலையிலும் சிலர் உயிரிழந்த நிலையிலும் வேட்பாளர் பட்டியல்களில் சிக்கல் காணப்படுவதால் புதிதாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share This Article