பிரமிட் நிதி நிறுவனம் மூலம் 1000 கோடி ரூபா மோசடி! தம்பதி கைது!

பிரமிட் நிதி நிறுவனம் மூலம் 1000 கோடி ரூபா மோசடி! தம்பதி கைது!

Editor 1

பிரமிட் நிதி நிறுவனம் மூலம் ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த நபரும் அவரின் மனைவியும் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

குருநாகல் பிரதேசத்தில் பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த 52 வயதான தம்மிக்க குமார ரணசிங்க என்பவரும் அவரின் மனைவியுமே இவ்வாறு கைதாகினர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற இவர், நேற்று அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைது செய்யப்பட்டார்.

கொழும்பு வந்த கணவரை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.

கைதான முதன்மை சந்தேகநபர் குருநாகலில் வணிக பாடசாலை ஒன்றையும் நடத்தி வந்தார். 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோரிடம் 11 வங்கிக் கணக்குகள் மூலமாக அவர் பணத்தைப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு ஏமாற்றிய பணம் ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Share This Article