வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரை நாட்டிற்கு வருமாறு அரசாங்கம் அறிவிப்பு!

வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரை நாட்டிற்கு வருமாறு அரசாங்கம் அறிவிப்பு!

editor 2

அரசியல் காரணங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் 15 பேர், மற்றும் உயர்ஸ்தானிகர்களை உடனடியாக இலங்கைக்கு வருமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜயவர்த்தனவால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராக
நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இந்தியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் ஷெனுகா செனவிரத்ன, அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர,
ஜப்பானுக்கான தூதுவராக ரோட்னி பெரேரா, மலேசியாவின் உயர்ஸ்தானிகர் முன்னாள் விமானப்படைத் தளபதி சுமங்கல டயஸ், நேபாளத்தின் தூதுவர் முன்னாள் விமானப்படை தளபதி சுதர்சன் பத்திரண, கியூபாவுக்கான தூதுவர் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரான முன்னாள் கடற்படைத் தளபதிரவீந்திர விஜேகுணரத்ன, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் உதய இந்திரரத்ன, கென்யா உயர்ஸ்தானிகரான கனகநாதன், சீசெல்ஸ் உயர்ஸ்தானிகரான முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரான ஷிமால் விக்ரமசிங்க மற்றும் ஈரான் தூதுவராக நியமிக்கப்பட்ட மொஹமட் ஷாஹிட் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெற்றிமாகவுள்ள தூதுவர் பதவிகளுக்கு வெளிநாட்டு சேவையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share This Article