கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை நாட்டுக்கும் ஏற்படலாம் என்கிறார் ரணில்!

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை நாட்டுக்கும் ஏற்படலாம் என்கிறார் ரணில்!

editor 2

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு அனுபவம் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அனுபவம் மிக்க தலைமைத்துவம் இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் அனுபவம் மிக்கவர்கள் குறைவு என தெரிவித்துள்ள அவர் எதிர்கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு அறிவுள்ள தலைமைத்துவம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் கடந்தகாலங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்;ளேன் தற்போது எங்கள் குழுவிலிருந்து புதிய அணியை உருவாக்கவேண்டும் என கருதுகின்றேன்,இவர்கள் மாத்திரமே நாட்டில் உள்ள அனுபவசாலிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது அணியினர் மூன்று நான்கு வருடங்கள் பதவிவகித்துள்ளனர் நாட்டின் பொருளாதார மீட்சியின் போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர் புதிய நாடாளுமன்றத்தில் அனுபவசாலிகள் இன்மை பின்னடைவாக அமையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட வேகத்தை சுட்டிக்காட்டிய அவர் உலகநாடுகள் கூட நினைத்துபார்க்க முடியாத விடயம் இது எனதெரிவித்துள்ளார்.

எனினும் அனுபவம் அற்ற தலைமை காரணமாக ஸ்திரதன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்து விபத்தினை இதனுடன் ஒப்பிட்டுள்ளார்.

Share This Article