கணக்கு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டோம் என்கிறார் அரியநேத்திரன்!

கணக்கு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டோம் என்கிறார் அரியநேத்திரன்!

editor 2

தேர்தல்கள் ஆணையகத்தில், தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால், வரவு-செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 13ஆம் திகதி, மின்னஞ்சல் ஊடாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமைக்கான, வரவு-செலவு அறிக்கையினை தமிழ்ப் பொதுக்கட்டமைப்பு, ஆணையகத்தில், சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழ்ப் பொதுவேட்பாளரை, நிறுத்திய தரப்புக்கள், ஆணையகத்தில், வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே பா.அரியநேத்திரன் இவ்வாறு பதிலளித்தார்.

Share This Article