மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தல் என்கிறார் சாகர!

editor 2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்தவராவார்.

அவருக்கு புலம்பெயர் அமைப்புகளாலும் பயங்கரவாத அமைப்புகளாலும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. இவ்வாறான தலைவரை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆதலால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

Share This Article