வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! வடக்கு – கிழக்கில் 20 ஆம் திகதி வரை பலத்த மழை!

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! வடக்கு - கிழக்கில் 20 ஆம் திகதி வரை பலத்த மழை!

editor 2
Bright lightning illuminates dark cloudy sky during a thunderstorm. Natural dangers and majestic beauty. Real cloudscape with computer generated lightning. Copy space on image side.

நாளை தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் சாத்தியமுள்ளது. இது 15ஆம் திகதி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதன்பின் 18 ஆம் திகதி அல்லது 19 ஆம் திகதி தமிழ் நாட்டின் வடக்கு பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

இத் தாழமுக்கத்தோடு இவ்வாண்டுக்கான வடகீழ் பருவக்காற்றின் உடைவும்
ஏற்படும்.

எனவே நாளை முதல் 20 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இத்தாழமுக்கத்தோடு இணைந்து அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இவ்வாண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்பை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article