இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக வங்கி, சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2024 இறுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறலைவிட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் 4 காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. நுண் பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல், கடன்மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது, வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக கட்டமைப்பு சீர்திருத் தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.