இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சுயேச்சை குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
ஜனநாயக தமிழ் அரசு என்ற பெயரில் இந்த சுயேச்சைக் குழு தேர்தலில்
களமிறங்கவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய இலங்கை தமிழ் அரசுக்கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது.
அண்மைநாட்களாக அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு வவுனியாவில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தது. வேட்பாளர்கள் தெரிவில் கட்சியின்
உறுப்பினர்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.
குறிப்பாக, யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவால்