சசிகலா ரவிராஜ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – ப.சத்தியலிங்கம் அறிவிப்பு!

சசிகலா ரவிராஜ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - ப.சத்தியலிங்கம் அறிவிப்பு!

editor 2

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் விடயங்களைக் கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியின் மூன்று மாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதம் எவையும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை.

அதுபோலவே சசிகலா ரவிராஜ் மற்றும் கே.வி தவராசா ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிய முடிகின்றது.

அவர்களது பதவி விலகல் கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை.

வேறொரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் இலங்கை தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Share This Article