நீதிமன்றை ஏமாற்றி விவகாரத்து பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி யாழில் கைது!

நீதிமன்றை ஏமாற்றி விவகாரத்து பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி யாழில் கைது

editor 2

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் குறித்த சட்டத்தரணி நேற்று (23) கைதுசெய்யப்பட்டார்.

இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளாரென தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

குறித்த பெண் விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து குறித்த தம்பதியினருக்கு விவாகரத்துப் பெற்றுக்கொடுத்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய சம்பவத்தில் கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சட்டத்தரணியின் அலுவலகத்திலிருந்த மூன்று கணிணிகளையும் பகுப்பாய்வு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article