ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பீல்ட் மார்ஷல், பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அடுத்த (ஓகஸ்ட்) மாதம் அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் இராணுவத் தளபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகன்ன கிருஷ்ணகுமார்,
மூலோபாய ஆலோசகர் வெங்கடேஷ் தர்மராஜா ஆகியோரை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சரத் பொன்சேகா சுயாதீன மக்கள் வேட்பாளராக போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ள அவர்கள் அவருக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் ஆதரவளிப்பாளர்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சில விடயங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்ததால் அவரது
அறிவிப்பு வெளியாவது தாமதமாகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.