துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்றமையே காரணம் என்று கூறியிருக்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரின் பின்னரும் சமூகத்தில் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன. இதுவே நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்குக் காரணம். போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புழங்குகின்றன. இதனால், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை – என்றார்.