ஞானசார தேரருக்கு பிணை!

ஞானசார தேரருக்கு பிணை!

Editor 1

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் (18) இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. 

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி, 4 வருடக் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது.

அத்துடன் ஒரு இலட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறும், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஞானசார தேரரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவருக்குப் பிணை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article