அத்துருகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பிரபல பாடகி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.